ஏரியூர் அருகே உள்ள கூர்காம்பட்டியில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் செல்கிறது. இந்த கழிவுநீர் ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இப்பகுதியில் முறையாக சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-சுகுணா, ஏரியூர்.