கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2025-10-05 17:39 GMT

திருச்செங்கோடு தொண்டிகரடு வீடில்லாதோர் சங்க காலனியில் 45-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு வீடுகளை சுற்றி நடைபாதைகளில் சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளது. செடி, கொடிகள், முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேட்டுப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகள், கழிவுநீர் காலனி குடியிருப்பு பகுதிகளில் தேங்குகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே முட்புதர்களை அகற்றி சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண், திருச்செங்கோடு.

மேலும் செய்திகள்