கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளக்கரையில் தினமும் ஏராளமானோர் நடைபயிற்சி சென்று வருகின்றனர். ஆனால் குளத்தில் தண்ணீர் மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அங்கு நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலையை காண முடிகிறது. குறிப்பாக முதியவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே தண்ணீர் மாசடைய என்ன காரணம்? என அதிகாரிகள் ஆய்வு செய்து, அதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.