வாழப்பாடி தாலுகா அனுப்பூர் கிராமத்தில் சாக்கடை கால்வாய் உள்ளது. இங்குள்ள விநாயகர் கோவில் தெருவில் கடந்த 4 ஆண்டுகளாக சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. மேலும் ஆங்காங்கே கழிவுநீர் வீட்டின் முன்பு தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கவுதமி, அனுப்பூர்.