சாலையில் தேங்கும் கழிவு நீர்

Update: 2025-08-17 17:48 GMT

மதுரை நகர் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு தென்றல் நகர் மெயின் ரோட்டில் கழிவுநீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் அதிலிருந்து அளவுக்கு அதிகமான கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மக்களின் நலன்கருதி சாலையில் தேங்கி கிடக்கும் கழிவு நீரை அகற்றவும், மேலும் தேங்காமல் இருக்க வழிவகை செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்