குன்னூர் மவுண்ட் ரோட்டில் நகராட்சி அலுவலகத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. பழுதாகி கிடந்ததால் கால்வாயை சீரமைக்க கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பள்ளம் தோண்டி அப்படியே விட்டுவிட்டனர். இதனால் கால்வாய் திறந்த நிலையில் கிடக்கிறது. அதில் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. அது பள்ளிக்குழந்தைகள் நடந்து செல்லும் பகுதி ஆகும். எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு கால்வாயை சீரமைத்து முறையாக மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.