கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2025-07-20 16:46 GMT

வெப்படை அடுத்த சின்னார்பாளையம் பாலாஜி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நகரின் 3 வீதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதி மக்கள் தொற்று நோய்க்கு ஆளாகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே கழிவுநீர் வாய்க்கால் வசதி உடனடியாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-குமார், வெப்படை.

மேலும் செய்திகள்