கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2025-07-06 19:19 GMT

மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லுவில் மக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி குடிநீர் தொட்டியை சுற்றிலும் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகிறது. குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாமியப்பன், அத்திமுட்லு.


மேலும் செய்திகள்