
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை கோவிலம்பாக்கம் அருள் முருகன் நந்தவனம் நகரில் நன்மங்கலம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நேரங்களில் மழைநீரும், கழிவுநீரும் வந்து கலக்கிறது. இதனால் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீர் துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் முதல் வயதானோர் வரை அனைவருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.