சுகாதார சீர்கேடு

Update: 2025-05-18 16:38 GMT

பாப்பிரெட்டிப்பட்டி திரு.வி.க. நகரில் தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெற வருகின்றனர். தற்போது இந்த அலுவலகம் முழுவதும் குப்பைகளும், முட்புதர்களும் நிறைந்து காணப்படுகின்றது. இதனை தூய்மை பணியாளர்கள் அகற்றவது இல்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் அலுவலக வளாகத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றத்தால் அலுவலகத்தினுள் பொதுமக்கள், அதிகாரிகள் செல்ல முடியவில்லை. எனவே இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றவும், கால்வாயை தூர்வார வேண்டும் என்பதே இ்ந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜாமணி, பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும் செய்திகள்