கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் உள்ளது ஜே.காருப்பள்ளி. இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் சரிவர தூர்வாரப்படவில்லை. இதனால் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் நிரம்பி உள்ளன. இந்த சுகாதார சீர்கேட்டால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் தூர்வாரப்பட வேண்டும்.
-ராம், கெலமங்கலம்.