பாப்பாரப்பட்டி பேரூராட்சி 3-வது வார்டில் அ.பாப்பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையோரமாக பள்ளியின் சுற்றுச்சுவர் முன்பு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காத வகையில் சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-சங்கர், அ.பாப்பாரப்பட்டி.