கழிவுநீர் குழியால் அபாயம்

Update: 2025-05-04 17:22 GMT

ராசிபுரம் நகராட்சி 26-வது வார்டு ராம் நகர் பகுதியில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு பாதாள சாக்கடைக்காக குழி தோண்டப்பட்டது. இந்தக்குழி சரி செய்யப்படாததால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. பள்ளி விடுமுறை என்பதால் இப்பகுதியில் அதிக அளவில் பள்ளி குழந்தைகள் விளையாடிக் கொண்டும் உள்ளனர். பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் தவறி குழந்தைகள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. தற்போது அந்த குழியில் பெரியளவில் குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதாலும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, ராசிபுரம்.


மேலும் செய்திகள்