சேலம் மேட்டுபட்டி எம்.பெருமாள்புரம் ஊராட்சியில் ராகவேந்திரபுரம் உள்ளது. இதன் அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பிரிவு சாலையோரம் உள்ள காலி நிலத்தில் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், மழைநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த பகுதியில் கழிவுநீரை வெளியேற்றும் கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-ராஜேஷ், சேலம்.