பந்தலூர் அருகே உப்பட்டி துணை மின்நிலையம் அருகே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் உடைந்து கிடக்கிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி வருகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. மேலும் உடைந்து கிடக்கும் கால்வாயில் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் தவறி விழும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.