நோய் பரவும் அபாயம்

Update: 2025-04-20 16:51 GMT

பர்கூர் தாலுகா கந்திகுப்பம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடம், நூலக கட்டிடம் எதிரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த பகுதியில் வரும் காலங்களில் மழை நீர் தேங்காத வகையிலும், தற்போது தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஷ், பர்கூர்.

மேலும் செய்திகள்