தொளசம்பட்டியில் இருந்து மேச்சேரி செல்லும் வழியில் கோயிலூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மேம்பாலத்திற்கு கீழ் செல்லும் சுரங்கப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மழை பெய்தால் சுரங்கபாதை முழுவதும் மழைநீர் தேங்குகிறது. மேலும் மழைநீர் வெளியேர வழியில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாய நிலை உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் மின் விளக்குகளும் இல்லை. எனவே மின்விளக்குகள் பொருத்தி தரவும், மழைநீர் வெளியே செல்லவும் அதிகாரிகள் வழி வகை செய்ய வேண்டும்.
-முனுசாமி, சேலம்.