பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2025-04-06 16:43 GMT

கிருஷ்ணகிரியில் 5 ரோட்டில் இருந்து சென்னை செல்லும் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாருவதற்காக சாலை அடைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக பர்கூர், மத்தூர் உள்பட பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சுற்றி செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் சென்னை சாலையில் பல வர்த்தக நிறுவனங்கள், கடைகளை திறக்க முடியாமல் மூடியே வைத்திருக்கும் நிலை உள்ளது. எனவே சாக்கடை தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகேஷ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்