பட்டுக்கோட்டை நகரில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.குறிப்பாக அண்ணா நகர், பாரதி நகர்,பெரியகடைத் தெரு,கரிகாடு,அந்தோணியார்கோவில் தெரு ஆகிய இடங்களில் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தற்போது தேர்வு நேரம் என்பதால் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொசு மருந்து அடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள், பட்டுக்கோட்டை