தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2025-04-06 11:32 GMT

பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் நுழைவுவாயில் அருகில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இங்கு குப்பைகள், மண் நிறைந்து அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை உடனடியாக தூர்வார வேண்டும். 

மேலும் செய்திகள்