சேலம் கன்னங்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் முன்புறம் உள்ள சாக்கடை கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களும், நோயாளிகளும் முகம் சுளிக்கும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் முழுவதும் தேங்கி உள்ள குப்பைகளை தூர்வாரி சுத்தமாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாமே!.
-சங்கரன், சேலம்.