சென்னை பிராட்வேயில் இருந்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு ஜெனரல் ஹாஸ்பிடல் ரோடு உள்ளது. இந்த வழியில் உள்ள பொதுமக்கள் நடைபாதையில் கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயின் மூடி இல்லாமல் திறந்த நிலையில் கிடக்கிறது. இதனால் யாராவது தவறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே, அசம்பாவித சம்பவம் நடப்பதற்குள் மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைக்க வேண்டும்.