பாதாள சாக்கடை சீரமைக்கப்படுமா?

Update: 2025-02-02 14:12 GMT


தஞ்சை 15-வது வார்டு ஏ.ஒய்.ஏ. நாடார் ரோடு பழைய கிருஷ்ணா தியேட்டர் எதிரில் உள்ள பொது கழிப்பறையின் பாதாள சாக்கடை இணைப்பில் அடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் அடிக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும் செய்திகள்