தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன் பாடி கிராமம் காலனி தெருவில் சாக்கடைகால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தொண்டராயன்பாடி