கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலையில் பல இடங்களில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் சாக்கடை நீர் சாலைகளில் செல்வதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலைகளில் சாக்கடை நீர் செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
-பாபு, கிருஷ்ணகிரி.