கிருஷ்ணகிரியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பாதையில் பாலத்தின் அருகில் சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் மக்களும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-பிரபு, கிருஷ்ணகிரி.