பந்தலூரில் அம்மா உணவகத்துக்கு செல்லும் வழியில் நடைபாதைக்கு அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி வருகிறது. அதில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயில் உள்ள அடைப்பை நீக்கி, கழிவுநீர் சீராக வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.