சேலம் சாரதா காலேஜ் அருகில் ராமகிருஷ்ணா ரோடு உள்ளது. இந்த சாலையையொட்டி உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதனால் இந்த வழியை பயன்படுத்துவோர் முகம் சுழித்தவாறு செல்கின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் அடைப்பு ஏற்பட்டு உள்ள கால்வாய்யை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சசிகுமார், தாரமங்கலம்.