சுகாதார சீர்கேடு

Update: 2025-01-05 13:36 GMT

சேலம் மேயர் நகர் 7-வது தெருவில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக இந்த பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் செல்ல முடியாத சூழல் உருவாகி வருகிறது. எனவே பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடாத வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-குமரன், சேலம்.

மேலும் செய்திகள்