பூட்டியே கிடக்கும் கழிவறை

Update: 2024-12-29 11:23 GMT
ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள மலை மீது பக்தர்களின் வசதிக்காக கழிவறை ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால் கழிவறை எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குடிநீர் தொட்டி பின்புறம் உள்ளிட்ட மறைவான பகுதிகளில் இயற்கை உபாதை கழித்து வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பூட்டி கிடக்கும் கழிவறையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக் க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்