பந்தலூர் தாலுகா உப்பட்டியில் பயணிகள் நிழற்குடை அருகே அத்திகுன்னா செல்லும் சாலையோரத்தில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் மூடி கிடப்பதால் அங்கு வந்து செல்பவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே அந்த கழிப்பிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு விட நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.