பந்தலூரில் அம்மா உணவகத்திற்கு செல்லும் நடைபாதையின் அருகே உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வருபவர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே அந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.