மூடி இல்லாத பாதாள சாக்கடை

Update: 2024-12-01 17:50 GMT

சேலம் சீதாராமன் சாலையில் டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் திறந்த நிலையில் பாதாள சாக்கடை மூடி இல்லாமல் உள்ளது. இதனால் சாலையோரம் நடைபயிற்சி செய்பவர்கள், மதுப்பிரியர்கள் அதில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் பாதாள சாக்கடைக்கு மூடி அமைத்து உயிர்பலியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபாலன், 4 ரோடு.

மேலும் செய்திகள்