உத்தமபாளையம் பேரூராட்சி 6-வது வார்டு பகுதியில் பொது கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுகள் அருகில் உள்ள சாக்கடை கால்வாய் மூலம் வெளியேற்றப்படுகிறது. ஆனால் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் இருப்பதால் அடைப்பு ஏற்பட்டு, கழிப்பறை கழிவுகள் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.