பொதுமக்கள் அவதி

Update: 2024-11-03 12:08 GMT

மதுரை ஜீவாநகர் பகுதியில் உள்ள சாலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி மேடு, பள்ளம் தெரியாமல் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அவ்வழியே செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்