மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சித்தாலங்குடி ஆனைக்குளம் தெருவில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் சாலைகளில் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமமடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?