மதுரை யாகப்பா நகர் எம்.ஜி.ஆர். தெருவில் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியே செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தேங்கி நிற்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நலன் கருதி மழைநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.