தூா்வார வேண்டிய கால்வாய்

Update: 2024-09-22 17:55 GMT

நாமகிரிப்பேட்டை அருகே முள்ளுக்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த அண்ணா நகரில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் குப்பைகளை அங்குள்ள குப்பை தொட்டியில் போட்டு வருகின்றனர். இந்த குப்பை தொட்டியில் பொதுமக்கள் கொட்டும் குப்பைகள், பாலித்தீன் பைகள் சாக்கடை கால்வாயில் தேங்கி கிடக்கிறது. மேலும் சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் ேநாய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூா்வார வேண்டும்.

-முருகன், அண்ணா நகர்.

மேலும் செய்திகள்