மதுரை விராட்டிபத்து 67-வது வார்டு இருளாண்டி தேவர் காலனி முதல் தெருவில் பாதாள சாக்கடையில் கழிவுநீர் கசிந்து கொண்டிருக்கிறது. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.