சென்னை நங்கநல்லூரை அடுத்த மூவரசம்பேட்டை, ராகவா நகர் 10-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும்அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.