கழிவுநீர் சாக்கடைப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா?

Update: 2026-10-18 06:36 GMT

சென்னை திருவேற்காடு, உதவும் கரங்கள் அருகே, தேரோடும் வீதி வளைவில் கழிவுநீர் சாக்கடை நிரம்பி, சாலையில் குட்டைபோல் தேங்கியுள்ளது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, இந்த வளைவில் மாநகரப் பேருந்துகள் திரும்புவதற்கு அதிக நேரம் ஆவதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் தேங்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்களா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்