கடலூர் பேருந்து நிலையத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் பேருந்து நிலையம் வரும் பயணிகள் முகம் சுழித்தபடி செல்வதை காண முடிகிறது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.