சாக்கடை வசதி

Update: 2024-06-23 17:09 GMT
  • whatsapp icon

பென்னாகரம் -தர்மபுரி பிரதான தேசிய நெடுஞ்சாலையில் அவ்வை நகர் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. பிரதான சாலை என்பதால் அவ்வழியே பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்தவாறு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காத வகையில் சாக்கடை வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பெருமாள், நாகதாசம்பட்டி.

மேலும் செய்திகள்