நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி பழைய தபால் அலுவலக வீதியில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த வீதியில் செல்லும் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. சாக்கடை கால்வாய் சேதம் அடைந்த நிலையில் கழிவுநீர் சரிவர செல்ல முடியாததால் சாலையோரம் தேங்கி நிற்கிறது. மேலும் கொசு தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.