மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் நகரில் பாதாள சாக்கடை மற்றும் சாலை வசதிகள் இல்லை. இதனால் கழிவுநீர் பள்ளங்களில் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மழை காலங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.எனவே இப்பகுதியல் சாலை மற்றும் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.