கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தில் ஓசூர், பெங்களூரு பஸ்கள் நிற்க கூடிய இடம் அருகில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் முறையாக பராமரிக்கப்படாததின் காரணமாக அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலம் பயணிகள் பலரும் திறந்த வெளியில் இயற்கை உபாதைகள் கழித்து செல்கின்றனர். எனவே பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-முருகன், கிருஷ்ணகிரி.