நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக பஸ் நிறுத்தம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் ஆறாக ஓடி அருகில் உள்ள விவசாய நிலத்தில் பாய்கிறது. இதனால் தென்னை மரம் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. விவசாயிகளின் நலன் கருதி விவசாய நிலத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.