சாக்கடை கழிவுகளை அகற்ற வேண்டும்

Update: 2022-07-19 11:41 GMT



வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே ஆற்காடு சாலையோரம் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடந்தது. அதனை ஊழியர்கள் மூலம் தூர்வாரி சாலை ஓரம் குவித்து வைக்கப்பட்டது. இதுவரையிலும் அந்த கழிவுகளை அகற்றாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குவித்து வைக்கப்பட்டுள்ள சாக்கடை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பெருமாள், வேலூர்.

மேலும் செய்திகள்