கால்வாய்களை தூர்வார வேண்டும்

Update: 2022-08-07 10:35 GMT

திருவண்ணாமலை நகராட்சி 5-வது வார்டு புதுவாணியங்குளத் தெரு 6-வது தெருவில் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தற்போது பெய்து வரும் மழையினால் மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் வழியாக வெளியே வந்து குடியிருப்பு பகுதிகள் முன்பு தேங்கி விடுகின்றன. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கால்வாய்கள் தூர்வாரிய போது அதில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட மண் கழிவுகள் குடிநீர் தொட்டியின் முன்பே வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அவதிபடுகின்றனர். அதனால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கால்வாய்களை தூர்வாரி, கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் இந்த பகுதியில் போதிய சாலை வசதி இல்லாமல் உள்ளது. இது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- உமா, திருவண்ணாமலை

மேலும் செய்திகள்