பென்னாகரம் அருகே உள்ள பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில் சாக்கடை நீர் வெளியேற வழி இல்லை. இதனால் பென்னாகரம்-தர்மபுரி சாலையில் சாக்கடைநீர் பாய்ந்து ஓடுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி முறையாக சாக்கடை நீர் செல்ல நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?